'’பெண்கள் மது அருந்துவோர்’’ பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் இதுதான் !

புதன், 28 அக்டோபர் 2020 (17:20 IST)
இந்தியாவில் பெண்களில் அதிக மது அருந்துவோர் பட்டியலில் அசாம் மாநிலம் முதலிடத்தில் உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஆய்வு தெரிவித்துள்ளது.
 
இந்தியாவில் தமிழகம், கேரளா , தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் அரசே மதுபானக் கடைகளை நடத்தி வருகிறது.
 
இந்நிலையில் இந்தியாவில் கடந்த 2015 முதல் 2016 ஆம் ஆண்டுகளில் குடும்பச் சுகாதார கணக்கெடுப்பு நடத்திய ஆய்வில், அசாம் மாநிலத்தை சேர்ந்த  15 வயது முதல் 49 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 26.3% பேர் மதுபானம் அருந்துபவர்களாக உள்ளதாக தகவல் வெளியானது..
 
இந்நிலையில் கடந்த 14  ஆண்டுகளில் இல்லாத வகையில் அசாம் மாநிலத்தில் மது அருந்துவோர்களின் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகிறது.
 
அருணாச்சலப் பிரதேசத்தில் 15 வயது முதல் 49 வயது உள்ள 35.6% ஆண்கள் மதுபானங்களை குடித்து வருவதாக தகவல் வெளியாகிறது.  அதேபோல் வாரத்துக்கு ஒருமுறை மதுபானம் குடிக்கும் பெண்கள் பட்டியலிலும் அசாம் மாநிலத்தில் 44.8%  புள்ளிவிரவப் பட்டியலில்  முதலிடத்தில் உள்ளது.
 
மேலும் சத்திஸ்க்சர், ஜார்கண் ஆகிய மாநிலங்களில் இதன் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாககத் தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்