தீர்ப்பின் பின்னணியில் மோடி? பிரார்த்திக்கும் திருநாவுகரசர்!

Webdunia
வியாழன், 14 ஜூன் 2018 (18:39 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்த சபாநாயகரின் உத்தரவு செல்லும் என தீர்ப்பு வழங்கினார். 
 
ஆனால், நீதிபதி சுந்தர் வழங்கிய தீர்ப்பில், சபாநாயகரின் உத்தரவு செல்லாது என தீர்ப்பு வழங்கினார். இதனால், இந்த வழக்கை விசாரிக்க 3 வது நீதிபதி அமர்த்தப்படுவார் என தலைமை நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். தற்சமயம் இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போயுள்ளது. 
 
இந்நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர். அவர் கூறியதாவது, இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கி இருக்கும் எம்.எல்.ஏ.கள் தகுதி நீக்க வழக்கு குறித்து நான் விமர்சிக்க விரும்பவில்லை.
 
ஆனால், 3 வது நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், இந்த தீர்ப்பின் பின்னணியில் மோடி இருந்திருக்கக்கூடாது என நான் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்