காங்கிரஸ் வெற்றிக்கு ராகுல் இதுவும் ஒரு காரணம்: திருநாவுக்கரசர் எம்பி

வெள்ளி, 9 டிசம்பர் 2022 (21:48 IST)
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றுள்ள நிலையில் இந்த வெற்றிக்கு ராகுல்காந்தியின் பாதயாத்திரையின் ஒரு காரணம் என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் நடைபெற்ற குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தலில் குஜராத் மாநிலத்தை பாஜகவும் இமாச்சல பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் கைப்பற்றின என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி பாத யாத்திரை செய்து வரும் நிலையில் இந்த பாதயாத்திரை இமாச்சலப் பிரதேச வெற்றிக்கு ஒரு காரணம் என திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் திரு நாவுக்கரசு தெரிவித்துள்ளார்
 
மேலும் இதே வெற்றி அடுத்து வரும் 2024ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்