”தமிழிசைக்கு மத்திய அமைச்சர் பதவி ஏன் கொடுக்கவில்லை??”.. திருமாவளவன் கேள்வி

Webdunia
திங்கள், 9 செப்டம்பர் 2019 (13:52 IST)
தெலுங்கானா கவர்னராக டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் பதவியேற்றுள்ள நிலையில் “அவருக்கு ஏன் மத்திய அமைச்சர் பதவி அளிக்கவில்லை?” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சமீபத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா கவர்னராக நியமிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து நேற்று கவர்னராக பதவியேற்ற அவர், 6 பேருக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

இந்நிலையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், ”பாஜக மாநில தலைவராக தீவிர அரசியலில் இயங்கிக்கொண்டிருக்கும் தமிழிசை சௌந்தரராஜனுக்கு ஓய்வு கொடுக்கும் வகையில் ஆளுநர் பதவி வழங்கியது ஏன்?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ”தமிழிசை துடிப்புடன் செயல்பட பாஜக ஏன் மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை தமிழிசைக்கு வழங்கக்கூடாது?? எனவும் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜகவினர் தமிழர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை என பலர் விமர்சனங்களை எழுப்பிவரும் நிலையில், தமிழக பாஜக தலைவர் டாக்டர். தமிழிசை சௌந்தரராஜனுக்கு மத்திய அமைச்சர் உள்ளிட்ட பதவிகளை ஏன் வழங்கூடாது என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்