திருமாவளவனின் விடுதலை சிறுத்தைக் கட்சி இந்த முறையும் திமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.. 10க்கும் மேற்பட்ட தொகுதிகளை அந்த கட்சி கேட்ட நிலையில் திமுக அக்கட்சிக்கு 8 தொகுதிகளை ஒதுக்கியது. அதுவும் அவர்கள் கேட்ட தொகுதிகளை கொடுக்காமல் வேறு தொகுதிகளை ஒதுக்கியது என தொல்.திருமாவளவன் வீடியோ போட்டு புலம்பியிருந்தார்.
அதன்பின் கிடைத்ததை ஏற்றுக் கொண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பினார் திருமாவளவன். தற்போது தேனி மாவட்டத்தில் அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.. தேனி மாவட்டம் பெரியகுளம் தொகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது திருமாவளவன் கட்சியின் வேட்பாளர் சக்திவேலை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தார்.
அப்போது நிறைய தொண்டர்கள் அங்கே கூடியிருந்தார்கள். அப்போது சிலர் ஆர்வமிகுதியில் பிரச்சார வாகனத்தின் மீது ஏறி அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சி செய்தனர். பலமுறை எச்சரித்தும் அவர்கள் கீழே இறங்கவில்லை. இதில் ஆத்திரமடைந்த திருமாவளவன் வாகனத்தில் ஏறி தொந்தரவு செய்த ஒரு தொண்டரின் கன்னத்தில் பளாரென அறைந்தார். அதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் கட்சி நிர்வாகிகள் தலையிட்டு அதை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.