போலீசார் வெளியிட்ட வீடியோ அனைத்தும் கிராபிக்ஸ் - திருமா அதிரடி

திங்கள், 30 ஜனவரி 2017 (16:49 IST)
ஜல்லிக்கட்டு தொடர்பாக போலீசார் வெளியிட்ட வீடியோக்கள் அனைத்தும் கிராபிக்ஸ் என விடுதலை சிறுத்தை திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.


 

 
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு வேண்டி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த மாணவர்களை, அங்கிருந்து வெளியேற்றும் பணியில் கடந்த 23ம் தேதி அதிகாலை தமிழக போலீசார் ஈடுபட்டனர். அப்போது, மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள திருவல்லிக்கேனி, நடுக்குப்பம் ஆகிய பகுதிகளில் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே மோதல் எழுந்தது. மோதல் கலவரமாக மாறியது.
 
அப்போது, போலீசாரே ஆட்டோ மற்று குடிசைகளுக்கு தீ வைக்கும் வீடியோக்களும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மாணவர்கள் போராட்டத்தில் சில அமைப்பை சேர்ந்தவர்கள் கலவரம் செய்தனர் என போலீசார் கூறிவருகின்றனர். அது தொடர்பாக பல வீடியோக்களையும் அவர்கள் சமீபத்தில் வெளியிட்டனர். 
 
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் “போலீசார் வெளியிட்டுள்ள வீடியோக்கள் கிராபிக்ஸ் செய்யப்பட்டது போல் இருக்கிறது. அவர்களின் போராட்டத்தை அனுமதி அளித்ததிலேயே ஏதோ உள்நோக்கம் இருக்குமோ எனத் தோன்றுகிறது. ஜல்லிக்கட்டு வேண்டி மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திய இளைஞர்கள் மீது தாக்குதல் தொடுத்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும்.  அதேபோல், மெரினா கடற்கரையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை வாபஸ் பெற வேண்டும்” என அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்