போலீஸ் மீது பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல்! – கடலூரில் பரபரப்பு!

புதன், 11 மே 2022 (11:36 IST)
கடலூர் பெரியகுப்பம் பகுதியில் கொள்ளையடிக்க வந்த கும்பல் போலீஸார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் பெரியகுப்பம் பகுதியில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கொள்ளையடிப்பதற்காக திட்டமிட்ட 20 பேர் கொண்ட கும்பல் நள்ளிரவில் அப்பகுதிக்குள் நுழைந்துள்ளது.

இதுகுறித்து தகவலறித்த போலீஸார் மற்றும் தொழிற்சாலை காவலர்கள் கொள்ளை கும்பலை வளைத்து பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது கொள்ளை கும்பல் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

6 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட நிலையில் 3 வெடித்துள்ளது. நல்வாய்ப்பாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிக்காத பெட்ரோல் குண்டுகளை கைப்பற்றிய போலீஸார் தப்பியோடிய கொள்ளை கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்