பப்ஸ், பாப்கார்ன் விலையைக் குறைப்பார்களா திரையரங்கு உரிமையாளர்கள்?

புதன், 5 ஜூலை 2017 (17:40 IST)
டிக்கெட் விலையை ஏற்றும் தியேட்டர் ஓனர்கள், பப்ஸ், பாப்கார்ன் போன்ற ஸ்நாக்ஸ்களின் விலையைக் குறைப்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.


 

 
வரியை நீக்க/குறைக்கச் சொல்லி, மூன்றாவது நாளாக இன்றும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர் திரையரங்கு உரிமையாளர்கள். இதனால், தமிழகத்தில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரையரங்குகளில், 3 நாட்களாக எந்தப் படமும் ஓடவில்லை. இவர்களுக்கு ஆதரவு தெரிவித்து, பாண்டிச்சேரியில் உள்ள திரையரங்குகளும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், அரசாங்கம் டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.
 
அதே சமயம், பாப்கார்ன், பப்ஸ் உள்ளிட்ட ஸ்நாக்ஸ் மற்றும் பார்க்கிங் கட்டணத்தை திரையரங்கு உரிமையாளர்கள் குறைப்பார்களா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர் பொதுமக்கள். காரணம், மல்ட்டிபிளக்ஸ் பெருகிவிட்ட நகரங்களில், இரண்டு பேர் படம் பார்க்கச் சென்றாலே குறைந்தது ஆயிரம் ரூபாய் ஆகிவிடுகிறது. குடும்பத்துடன் சென்றால், சொல்லவே வேண்டாம். சில இடங்களில் ஒரு மணி நேர பார்க்கிங்கிற்கு 50 ரூபாய் வசூலிக்கின்றனர். கூட்டிப் பார்த்தால், டிக்கெட் விலையைவிட பார்க்கிங் விலை அதிகமாக இருக்கிறது. எனவே, பார்க்கிங் மற்றும் ஸ்நாக்ஸ் விலையைக் குறைக்க வேண்டும் என்கின்றனர் பொதுமக்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்