பின்பு ஜெயஸ்ரீயை நெய்வாய்க்கால் பகுதியில் உள்ள கல்லணைக்கு தன் இரு சக்கர வாகனத்தில் விக்னேஷ் அழைத்துச் சென்றார் அப்போதும், இருவருக்கும் மீண்டும் சண்டை எழுந்ததாக தெரிகிறது. அதனால் மனம் உடைந்த ஜெயஸ்ரீ அருகே ஓடும் கல்லணையில் திடீரெனக் குதித்தார். காதலி ஆற்றில் குதித்ததைச் சற்றும் எதிர் பார்க்காத விக்னேஷ் தானும் ஆற்றில் குதித்து உடனே ஜெயஸ்ரீயைக் காப்பற்ற முயன்றார். இதை அருகில் இருந்தவர்கள் பார்த்து இருவரையும் கப்பாற்ற முற்பட்டனர். ஆனால் விக்னேஷை மட்டுமே அவர்களால் காப்பற்ற முடிந்தது. இது நடந்து இரு நட்களுக்கு பிறகே ஜெயஸ்ரீயின் உடல் துறையூர் ஆற்றுப் பாலத்தின் அருகே சடலமாகக் கிடந்துள்ளது.
தன் காதலி தற்கொலைக்கு முயன்ற நாளில் இருந்தே வேதனையுடன் சோகமயமாக காணப்பட்ட விக்கேஷ், ஜெயஸ்ரீ இறந்து போனது தெரிந்ததும் தானும் தற்கொலைக்கு முயன்று விஷம் பருகியுள்ளார். அவரை தஞ்சை மருத்துவமனையில் சேர்த்திருந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.