ஜிம்கள் திறக்க என்னென்ன கட்டுப்பாடுகள்: வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிப்பு

வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (20:52 IST)
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் ஏழு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதும் இந்த ஏழாம் கட்ட ஊரடங்கில் ஒரு சில கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்த ஊரடங்கில் அறிவிக்கப்பட்ட தளர்வுகளில் ஒன்று ஜிம்கள் திறக்க அனுமதிக்கப்படும் என்பது தான். சமீபத்தில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ’ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஜிம்கள் திறக்கலாம் என உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார் 
 
இந்த நிலையில் ஜிம்கள் திறப்பதற்குண்டான வழிகாட்டி நெறிமுறைகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: 
 
50 வயதுக்கு மேற்பட்டோரையும்‌, 15 வயதுக்கு குறைவான சிறுவர்களையும்‌ அனுமதிக்க கூடாது என கட்டுப்பாடு
 
முழுமுகக்கவசம்‌ அணிந்து வருபவர்களை மட்டும்‌ உடற்பயிற்சி கூடத்திற்குள்‌ அனுமதிக்குமாறு உத்தரவு
 
என்‌-95 உள்ளிட்ட மூக்கு மற்றும்‌ வாயை மூடும்‌ முகக்கவசங்களை அணியக்‌ கூடாது என அறிவுறுத்த வேண்டும். மூக்கு மற்றும்‌ வாயை மூடும்‌ முகக்கவசத்தை அணிந்தால்‌ உடற்பயிற்சியின்போது மூச்சுத்‌திணறல்‌ ஏற்பட வாய்ப்பு உருவாகும்‌ என எச்சரிக்கை
 
ஜிம்‌.களில்‌ குறைந்த அளவில்‌ உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்‌
 
தனிநபர்‌ இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்‌
 
இவ்வாறு அந்த வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்