’கட்சிகள் வாரிசு அரசியலையே ஊக்குவிக்கின்றன ’ - நீதிமன்றம் வேதனை

செவ்வாய், 19 மார்ச் 2019 (16:32 IST)
வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தமிழகத்தி இருபெரும் திராவிட கட்சிகள் இன்று தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் பெரும்பாலான கட்சிகள் வாரிசு அரசியலையே ஊக்கிவிக்கின்றன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது.
 
இன்று நீதிமன்றத்தில் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடும் போது தேர்தல் வாக்குறுதியை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடியைச் சேர்ந்த ராம்குமார் என்பவர் கூறியிருந்தார்.
 
இதில் திமுக,அதிமுக, பாஜக அமமுக நாம் தமிழர் கட்சியைத் தவிர மற்ற கட்சி உறுப்பினர்கள் ஆஜரகாத நிலையில் பிற கட்சிகளுக்கு 1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதிகள் உத்தவிட்டனர்.
 
இவ்வழக்கு இன்று நீதிபதி எஸ்.எஸ் கந்தர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து கட்சிகள் சார்பில் வழக்கறிஞர் ஆஜராகி அபராதத்தை திரும்ப பெறுமாறு வேண்டுகோள்விடுத்தனர். ஆனால் நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
 
மேலும் அபராதம் விதித்தால் அது கட்சிகளை பாதிக்குமென்று கூறப்பட்டது.அதற்கு நீதிபதி  நன்கொடையாக செலுத்துமாறு உத்தவிட்டனர்.
 
அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
 
கம்யூனிஸ்டு கட்சியைத் தவிர பிற கட்சிகள் அனைத்தும் வாரிசு அரசியலையே ஊக்குவிக்க்கின்றன என்று வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்