கோவை தடாகம் அருகே பன்னிமடை பகுதியை சேர்ந்தவர்கள் முத்துக்குமார், பாரதி தம்பதியினர். இருவரும் ஆயுர்வேத மருத்துவர்கள். இவர்கள் வீட்டு வேலைக்காக சின்னத்தடாகம் பகுதியை சேர்ந்த பாரதி(வயது 37) என்ற பெண்னை பணியமர்த்தி உள்ளனர்.
அதனை தொடர்ந்து அங்கு வந்த பணிப்பெண் பாரதி பீரோவில் இருந்த 10 கிராம் நகை, மற்றும் 34 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடியுள்ளார். இதனை மறைந்திருந்து செல்போனில் வீடியோ பதிவு செய்த அவர்கள் பாரதியை கையும் களவுமாக பிடித்து தடாகம் காவல் நிலையத்தை ஒப்படைத்தனர். பின்னர் தடாகம் காவல்துறையினர் பாரதியை கைது செய்தனர்.