கோவையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கு இடையே இருக்கும் குற்றால அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் ஏராளமானோர் வருவது வழக்கம். நேற்று மாலை குடிபோதையில் வந்த 4 போலீஸார் அருவி இருக்கும் பகுதிக்கு செல்ல முயன்றனர். பாதுகாப்பு கருதி வனத்துறை ஊழியர்கள் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து, இரு தரப்புக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, குடிபோதையில் இருந்த போலீஸார் வனத்துறை ஊழியர்களை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். அருகில் இருந்த மற்ற ஊழியர்கள் வந்து அவர்களை பிடித்து காருண்யா நகர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.