இதனால், தமாகாவில் இருந்து அப்போதே, மூத்த தலைவர்களான பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் ஆகியோர் தமாகாவுக்கு முழுக்கு போட்டு மாற்றுக்கட்சியில் இணைந்தனர்.
இந்த நிலையில், தமாகாவைச் சேர்ந்த மூன்று, மாஜி எம்எல்ஏக்கள் அதிமுகவில் இணைய உள்ளனர். இதற்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் அவர்கள் இணைய தேதி கேட்டு கடிதம் கொடுத்து காத்துள்ளனர். இந்த தகவல் அறிந்த ஜி.கே.வாசன் கடும் அதிருப்பதியில் உள்ளதாக கூறப்படுகிறது.