கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த நான்கு பெண்களின் குடும்பத்திற்கு நிவாரண உதவிகள் அறிவித்த முதல்வர்

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2023 (20:42 IST)
தைப்பூசத்தை முன்னிட்டு தனியார் நிறுவனம் இலவச புடவை வழங்க இருப்பதாக அறிவித்ததை அடுத்து அந்த புடவையை வாங்க சென்ற 4 பெண்கள் நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் முக ஸ்டாலின் நிவாரண உதவி  அறிவித்துள்ளார்.

திருப்பத்தூரில் தைப்பூசத்தை முன்னிட்டு இலவசமாக புடவைகள் வழங்குவதாக தனியார் நிறுவனம் ஒன்று அறிவித்திருந்தது. இந்த புடவை வாங்குவதற்கு முண்டி அடித்துக் கொண்டு ஆயிரக்கணக்கான பெண்கள் முயற்சித்தனர்

1000க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே இடத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் மயக்கம் அடைந்ததாகவும் இதில்  4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் நாளை (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (4.2.2023) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார்.

அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி (1) வள்ளியம்மாள் (வயது 60) க/பெ. சண்முகம், (2) ராஜாத்தி (வயது62) க/பெ. ஜெமினி, (3) நாகம்மாள் (வயது 60) க/பெ. சின்னத்தம்பி மற்றும் (4) மல்லிகா (வயது 70), க/பெ.

மணி ஆகிய வயதான நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் மூன்று பெண்கள் காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்திற்குக் காரணமான அய்யப்பன் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந் தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்ட தெசிவில் சிக்கி உயிரிழத்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தகர் பிரண்டு கேட்சம் பாயும். கடும் காயமடைந்து மூச்கத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சியிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தவா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்