நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்த முதல்வர் !

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2023 (18:23 IST)
காஞ்சிபுரத்தில் ஏரியில் மூழ்கிப் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு முதல்வர் முக.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம்  நெல்வாய் கிராமத்தில்  வசிப்பவர் பாஸ்கர். இவரது மமனைவி காமாட்சி. இத்தம்பதியர்க்கு 3 குழந்தைகள் இருந்தனர்.

இவர்களில் மூத்த மகள் சரளா அங்குள்ள அரசுப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்,. மகன் விஜய் 3 ஆம் வகுப்பும், மகள் பூமியா 2 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த மாணவர்கள் விஜய் மற்றும் பூமிகா இருவரும் அருகிலுள்ள ஏரிக்குச் சென்றனர். அவர்கள் மீண்டும் வீட்டிற்குத் திரும்பாதால் பெற்றோர் அவர்களைத் தேடிப் பார்த்தனர். இதுகுறித்து போலசில் தகவல் அளித்த நிலையில், சந்தேகத்தின் அடிப்படையில், தீயணைப்புட்த்துறைக்கு தகவல் கூறினர்.

ஏரியில் தேடியபோது, இரு குழந்தைகளும் ஏரியில் மூழ்கி  உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், காஞ்சிபுரத்தில் ஏரியில் மூழ்கிப் பலியான குழந்தைகளின் குடும்பத்திற்கு முதல்வர்  முக.ஸ்டாலின் இரங்கல் மற்றும் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், நெல்வாய் கிராமத்தைச் சேர்ந்த திரு.பாஸ்கர் என்பவரின் இரண்டு குழந்தைகள் விஜய் (வயது 7) மற்றும் பூமிகா (வயது 4) ஆகிய இருவரும் 17-4-2023 அன்று மாலை நெல்வாய் ஏரியில் எதிர்பாராத விதமாக விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

உயிரிழந்த சிறார்களின் பெற்றோருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுக்கு இரண்டு இலட்சம்ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்