குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் நடிகை ரோஜா

வெள்ளி, 29 ஜூலை 2016 (10:06 IST)
செம்பருத்தி படத்தில் அறிமுகமான நடிகை ரோஜா 90-களில் தமிழ் சினிமா உலகின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.


 


சூப்பர் ஸ்டாருடன் ஜோடியாக நடித்த அவர், தற்போது அழகான அம்மா நடிகையாகவும் நடித்து வருகிறது. செல்வமணியை திருமணம் செய்து தமிழ்நாட்டு மருமகளாக இருந்தாலும் ஆந்திர அரசியலுக்கு சென்று அங்கேயும் வெற்றி பெற்று விட்டார்.

ஜீ தமிழ் டிவியில் லக்கா கிக்கா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ரோஜா, ஜீன்ஸ் நிகழ்ச்சியிலும் தொகுபாளினி ஆனார்.  தற்போது தெலுங்கு சேனல்களிலும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார். ஜெமினி டிவியில் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைக்கும் ரக்சா பந்தா என்ற சமூக சேவை நிகழ்ச்சியின் முன்னோட்டத்தைப் பார்த்தே ஏராளமானோர் ரோஜாவை பாராட்டி வருகின்றனராம். இது, ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்சியாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்