வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு என்பது இறுதியானதல்ல: ஓபிஎஸ் திடீர் பல்டி

செவ்வாய், 30 மார்ச் 2021 (08:56 IST)
சமீபத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளிவந்தது என்பதும் இந்த அறிவிப்பை அடுத்து அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பை பாமக அளவில் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடியது என்பதும் இதன் காரணமாக அந்த கட்சிக்கு ஒட்டுமொத்த வன்னியர்களின் வாக்குகளும் விழ வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது குறித்து மற்ற சமூகத்தினர் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால் மற்ற சமூகத்தினரின் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைக்காமல் போகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது 
 
இந்த நிலையில் தனியார் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்கள் ’20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.6 சதவீதம் உள் ஒதுக்கீடு அளித்து இருப்பது என்பது இடைக்கால ஏற்பாடு தான் என்றும் இது இறுதியானது அல்ல என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்தபிறகு நிரந்தரமான உள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களின் திடீர் பல்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்