பவுன்ஸ் செக் பட்டியலை கொடுத்தால் பணத்தை வாங்கி தருகிறேன்: நா.முத்துக்குமார் குடும்பத்தினருக்கு தாணு அறிவிப்பு

வியாழன், 18 ஆகஸ்ட் 2016 (11:53 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் கடந்த ஞாயிறன்று மரணம் அடைந்தார். மருத்துவ செலவிற்கு பணம் இல்லாததால் அவர் சிகிச்சை செய்ய முடியாமல் இறந்ததாக கூறப்படுகிறது.


 

பாடல் எழுதியதற்காக முத்துக்குமாருக்கு தயாரிப்பாளர்கள் சம்பளமாகத் தந்த காசோலைகள் பல வங்கியில் பணமின்றி திரும்பிவிட்டனவாம். ஆனாலும் அதனை பெரிதுபடுத்தாமல் அந்த காசோலைகளை அப்படியே வைத்துவிடுவாராம் அவர். இவ்வாறு பணம் இல்லாமல் திரும்பிய காசோலைகளின் மதிப்பு மட்டுமே ரூ 60- 70 லட்சத்தைத் தாண்டும் என்றும் கூறுகிறார்கள்.

இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க கூட்டம் தாணு தலைமையில் நடைபெற்றது. அதில் பேசிய தாணு, நா. முத்துக்குமாருக்கு எந்தெந்த தயாரிப்பாளர்கள் அளித்த காசோலைகள் பணமின்றி திரும்பிவந்தன என்ற பட்டியலை அவரது குடும்பத்தார் அளித்தால் அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை தான் வாங்கித் தருவதாக கூறினார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்