நன்றி மறந்தவர் எஸ்.வி.சேகர் அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் !

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:30 IST)
பிரபல நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் நான் ஒரு முறை கூட ஜெயலலிதா காலில் விழுந்ததில்லை.சசிகலாவை  சந்தித்தஇல்லை. நான் விசுவாசியல்ல. நேர்மையானவன். 2 ஜோடி கால்களைத்தவிர முகத்தையே நிமிர்ந்து பார்க்காதவர்களுக்கு நான் என் கருத்தில் உறுதியாக இருக்கின்றேன். MGR JJ படத்தை அதிமுக கொடியில் போட முடியாது என சொல்வீர்களா என்று பதிவ்பிட்டிருந்தார்.

மேலும், என் MLA சம்பளம், என் ஓய்வூதியம் தமிழக அரசால் வழங்கப்படுகிறது. அதிமுகவினால் அல்ல. என் சம்பளம் தவிர ஒரு பைசா கூட கமிஷனாக சம்பாதிக்காதவன் நான். அப்படி எத்தனை விசுவாசிகள் சொல்வீர்கள்

யோசியுங்கள். புரியும். இல்லை அம்மாவின் ஆத்மா புரியவைக்கும். “மான ரோஷம்” நல்ல காமெடி என்று பதிவிட்டுருந்தார்.

இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி கொடுத்துள்ளார்.

அதில், எஸ்.வி.சேகர் மான ரோஷம் உள்ளவராக இருந்தால், அதிமுக எம்.எல்.ஏவாக அவர் 5 ஆண்டுகள் பெற்ற சம்பளம் மற்றும் பென்சனை திருப்பித் தர வேண்டும்.
எஸ்.வி சேகர் தருவாரா? அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தைத் தூக்க வேண்டும் என எஸ்.வி கூறியதற்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

இந்நிலையில் பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகரை அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

அதில்,  அதிமுக தான் நடிகர் எஸ்.வி.சேகருக்கு அடையாளம் கொடுத்தது என்றும் எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர் என விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்