தமிழக பாஜக தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் நியமனம்

சனி, 16 ஆகஸ்ட் 2014 (19:15 IST)
பாஜகவின் தமிழ் மாநில தலைவராக தமிழிசை சவுந்தர்ராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பாஜகவின் தேசிய தலைவராக நியமிக்கப்பட்ட அமித் ஷா, கட்சியை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறார். கட்சியின் 11 துணைத் தலைவர்கள், 8 பொதுச் செயலாளர்கள், 14 செயலாளர்கள் கொண்ட முதல் பட்டியலை காலையில் வெளியிட்டார். 
 
அந்த பட்டியலின்படி, தமிழ்நாடு பாஜக செயலாளராக எச்.ராஜாவும், செய்தித் தொடர்பாளராக லலிதா குமாரமங்கலமும் அறிவிக்கப்பட்டிருந்தனர். 
 
இந்நிலையில், கட்சியின் தேசிய செயலாளர் தமிழிசை சவுந்தர்ராஜன் தமிழக பா.ஜனதா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்