தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து விபத்து: தப்பியோடிய ஓட்டுனர்!

வியாழன், 25 பிப்ரவரி 2021 (12:03 IST)
போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று காலை முதல் வேலை நிறுத்தம் செய்துள்ள நிலையில் தற்காலிக தொழிலாளர்கள் மற்றும் அதிமுக தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களால் மட்டும் ஒரு சில பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் அனுபவமில்லாத தற்காலிக பேருந்து ஓட்டுநர்கள் ஓட்டும் பேருந்துகள் விபத்து நடக்க வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே சமூக ஆர்வலர்கள் எச்சரித்திருந்தனர். அந்த வகையில் தற்போது கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுனர் ஒருவர் இயக்கிய பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட நிலையில் கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுனர் ஒருவர் பேருந்தை இன்று காலை இயக்கினார். இவர் ஓட்டிய பேருந்து மற்றொரு பேருந்து மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் இல்லை என்றாலும் விபத்து குறித்து தகவல் அறிந்த போக்குவரத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தற்காலிக பேருந்து ஓட்டுனர் தப்பி ஓட்டம் பிடித்து உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
இதனை அடுத்து தப்பி ஓடியதாக ஓட்டுநரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போக்குவரத்து துறையினர் மற்றும் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது
 
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள நிலையில், கடலூர் பணிமனையில் தற்காலிக ஓட்டுநர் இயக்கிய பேருந்து, மற்றொரு பேருந்து மீது மோதி விபத்து - மற்றவர்கள் வருவதற்குள் தற்காலிக ஓட்டுநர் தப்பி ஓட்டம்
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்