கோவில்களில் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை

திங்கள், 11 ஜனவரி 2016 (22:52 IST)
தமிழக கோவில்களில் ஆடைக் கட்டுப்பாட்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
 

 
தமிழகத்தில், இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆலயங்களில் பக்தர்கள், பெண்கள் லெகீன்ஸ், ஜீன்ஸ் அணிந்து வர தடை விதிக்கப்பட்டது. ஆண்கள் வேஷ்டி, சட்டை அணிந்து வரவும், பாரம்பரிய உடை அணிந்து வந்தால் மட்டுமே அனுமதி என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த ஆடை கட்டுப்பாடு ஜனவரி முதல் தேதி முதல் இது அமலுக்கு வந்தது.
 
இந்த உத்தரவை எதிர்த்து , இந்து அறநிலையத்துறை செயலாளர், சென்னை உயர் நீதிமன்ற கிளையில் அப்பீல் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்து கோவில்களில் ஆடை கட்டுப்பாடு விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜனவரி  18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்