தனியார் தொலைக்காட்சியின் காபி நிகழ்ச்சி தொகுப்பாளினி, தனது நீண்ட நாள் நண்பரை திருமணம் செய்து கொண்டார். அவரது கணவர் திரைப்படத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். சினிமா துறையில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று துடிப்பாய் இருக்கிறாராம்.
இந்நிலையில் அவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, தனக்கு தெரிந்தவர்களிடம் சினிமா இயக்குவதற்கு தனக்கு வாய்ப்பு வாங்கித் தரும்படி, தொகுப்பாளினியை அவர் நச்சரித்து வருகிறார் என்றும், ஆனால், அதில் விருப்பம் இல்லாத தொகுப்பாளினி “நான் யாரிடம் சிபாரிசு கேட்க மாட்டேன். நீங்களே வாய்ப்பு தேடிக் கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டாராம்.