காயமடைந்த மாணவர்களை காப்பாற்ற முன்வராத ஆசிரியர்கள் - அமைச்சர் வேதனை!

வியாழன், 23 டிசம்பர் 2021 (15:28 IST)
காயமடைந்த மாணவர்களை காப்பாற்ற முன்வராத ஆசிரியர்கள் - அமைச்சர் வேதனை!
 
அண்மையில் நெல்லை டவுன் சாப்டர் பள்ளியில் திடீரென கழிவறை சுவர் இடிந்து  3 மாணவர்கள் பலியாகினர். இந்த விவகாரம் தொடர்பாக நெல்லையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பேச்சு நடந்தது. இனி இது போன்ற சம்பவம் நடக்கக்கூடாது அந்த கூட்டத்தில் எச்சரிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் சாப்டர் பள்ளி விபத்தில் காயமடைந்த மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மற்ற மாணவர்கள் பள்ளியில் உள்ள ஆசிரியர்களிடம் காரில் அழைத்து செல்ல கூறியுள்ளனர். ஆனால் எந்த ஆசிரியரும் முன்வரவில்லை என்பது வேதனை அளிக்கிறது என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்