திமுக தேர்தல் அறிக்கையில் தேயிலை விலை நிர்ணயப் பிரச்சினை இடம் பெறும்: ஆ.ராசா தகவல்

வெள்ளி, 28 ஆகஸ்ட் 2015 (23:22 IST)
திமுக தேர்தல் அறிக்கையில் தேயிலை விலை நிர்ணயப் பிரச்சினை இடம் பெறும் என்று திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.


 

இது குறித்து, திமுக கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ஆ.ராசா செய்தியாளர்களிடம் கூறியதாவது:–
 
நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள், பச்சைத் தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யக் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பச்சைத் தேயிலை பிரச்சனை விவசாயிளின் வாழ்வாதாரப் பிரச்சினையாக உள்ளது.
 
நீலகிரி மாவட்ட தேயிலை பிரச்சினையை மத்திய, மாநில அரசுகளின் கவனத்துக்கு நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொண்டு செல்வது இல்லை.
 
திமுகவின் சட்டசபை தேர்தல் அறிக்கையில், பச்சைத்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்வது குறித்த விவகாரம் இடம் பெற திமுக தலைவர் கருணாநிதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
 
இது குறித்து, சட்டசபை தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவிடம் நீலகிரி விவசாயிகள் வழங்கிய மனுவை தலைவர் அளித்து உள்ளார்.
 
எனவே, திமுக தேர்தல் அறிக்கையில் பச்சைத் தேயிலை விலை நிர்ணய பிரச்சினை நிச்சயம் இடம் பெறும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்