டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது

திங்கள், 18 ஜனவரி 2016 (09:43 IST)
சேலம் மாவட்டம் அஸ்தம்பட்டி பகுதியில், டாஸ்மாக் மதுக்கடையை அகற்ற வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


 

 
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது.
 
இந்த போராட்டத்தில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.
 
அவர்கள், மதுக்கடையை முற்றுகையிட வந்த போராட்டக் குழுவினரை, அஸ்தம்பட்டி காவல் துறையினர் தடுத்து நிறுத்த முயன்றனர்.
 
அப்போது, இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதைத் தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்த முயன்றனர். அப்போது போராட்டத்தில், ஈடுபட்ட 7 பெண்கள் உள்ளிட்ட 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
 
அஸ்தம்பட்டியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை அகற்றக் கோரி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

அப்போது, மதுக்கடை வேறு இடத்துக்கு மாற்றப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால், இதுவரை அந்த மதுக்கடையை இடம் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்