மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறை தடியடி: வைகோ கண்டனம்

செவ்வாய், 19 ஜனவரி 2016 (01:56 IST)
சேலத்தில், மதுக்கடையை அகற்றக் கோரி போராட்டம் நடத்திய இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய சம்பவத்திற்கு வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–
 
சேலம் அஸ்தம்பட்டியில் பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ள பகுதியில் தமிளக அரசின் டாஸ்மாக் மதுக்கடையால் பொது மக்களுக்கும், குறிப்பாக பெண்களுக்கு பெரும் அச்சமும், துன்பமும் ஏற்பட்டுள்ளது.
 
இதனால், இந்த மதுக்கடையை அகற்றக் கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் அஸ்தம்பட்டி மதுக்கடையை முற்றுகையிடும் போராட்டத்திற்கு சென்றவர்கள் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமாக தடியடி நடத்தியுள்ளனர். மேலும், ஏழு பெண்கள் உள்ளிட்ட 55 பேரை கைது செய்துள்ளனர். காவல்துறையின் இந்த செயல்பாடு மனச்சாட்டிசி உள்ளவர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.
 
தமிழகம் முழுக்க உள்ள மதுக்கடைகளுக்கு எதிராக மக்கள் எழுச்சியோடு நடத்தும் போராட்டங்களை, காவல்துறை மூலம் அடக்கி விடலாம் என்று தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த போக்கு மிகவும் வருந்ததக்கது. கண்டிக்கத்தக்கது தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்