ஒவ்வொரு ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் டாஸ்மாக் ஊழியர்களுக்கு குரூப் 'சி' மற்றும் குரூப் 'டி' பிரிவு பணியாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், துணை விற்பனையாளர்களுக்கு 20% போனஸ் வழங்கப்படும். இதனால், டாஸ்மாக் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக குறைந்தது ரூ. 16,800 கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டும் தீபாவளி போனஸாக டாஸ்மாக் ஊழியர்களுக்கு 20% போனஸ் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் அதே தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், டாஸ்மாக் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அவர்கள் தமிழக அரசுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.