தஞ்சைப் பெரிய கோயில் குடமுழுக்கு – சர்ச்சையைக் கிளப்பிய அமைச்சர் !

திங்கள், 20 ஜனவரி 2020 (08:50 IST)
விரைவில் நடக்க இருக்கும் தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவின் போது தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் வழிபாடு நடக்கும் என அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சோழப் பேரரசின் மிகப்பெரிய சாதனைகளுள் ஒன்றாக 1000 ஆண்டுகளாக விளங்கி வருகிறது தஞ்சை பெரிய கோயில். இந்த கோயிலின் குடமுழுக்கு விரைவில் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் குடமுழுக்கின் போது தமிழில் மட்டுமே வழிபாடு நடத்த வேண்டுமென தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதற்கு திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இது சம்மந்தமாக ஜனவரி 22 ஆம் தேதி தஞ்சாவூரில் தஞ்சை பெரியகோயில் உரிமை மீட்புக்குழுவினர் சார்பாக மாநாடு நடத்த உள்ளனர். இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாபா பாண்டியராஜன் தமிழ் மற்றும் சமஸ்கிருதம் உள்ளிட்ட இரு மொழிகளிலும் வழிபாடு செய்யப்படும் என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்