கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் இதுவரை வயதானவர்கள் மட்டுமே உயிரிழந்து வந்தனர் என்பதும் தற்போது வயதானவர்கள் மட்டுமின்றி இளவயதை சேர்ந்தவர்களும் உயிர் இழந்து வருவதாக வெளிவந்து கொண்டே செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏற்கனவே சர்க்கரை நோய், இரத்த அழுத்தம், இதய நோய் உள்பட ஒருசில நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அவர்கள் உயிர் இழப்பது தான் இதுவரை வழக்கமாக இருந்தது. ஆனால் தற்போது எந்த அறிகுறியும் இல்லாமல் திடீரென கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலும் குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது
அந்த வகையில் தஞ்சை மருத்துவமனையில் 13 வயது சிறுவன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அந்த சிறுவன் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த சிறுவனுக்கு வேறு எந்த நோயும் இல்லாத நிலையில் கொரோனா வைரஸ் மட்டும் அவனது உயிர் பலியானதற்கு காரணமாக இருப்பதால் கொரோனா வைரஸின் வீரியம் அதிகமாகி விட்டதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது