அதன்பின், ஜெயலலிதான் உடல் நிலை குறித்து அவர் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, பல காவல் நிலையங்களில், அவர் மீது ஏராளமான புகார்கள் கொடுக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழச்சி தனது முகநூல் பக்கத்தில் புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், "தமிழ்நாட்டுக்குள் பதட்டத்தை ஏற்படுத்தி கலவரத்தை உருவாக்கி ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த வேண்டும்" என்ற மத்திய அரசு திட்டத்திற்கு தமிழர்கள் துணை போக வேண்டாம்.
தமிழக மக்களின் பதட்ட நிலையை தவிர்க்க வேண்டுமானால், ஜெயலலிதா உடல்நிலை குறித்து அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்த்து ஜெயலலிதாவை நேரடி தொலைக்காட்சியில் காட்ட உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவின் இதயத்துடிப்பு இயந்திரத்தின் செயற்பாட்டை காட்ட வேண்டும்.