கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படும் தமிழக நூலகங்கள்! – பொதுநூலக இயக்குனரகம் அனுமதி!

சனி, 24 ஜூலை 2021 (10:15 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மூடப்பட்டிருந்த நூலகங்களை இன்று முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் அனைத்து நூலகங்களும் மூடப்பட்டன. இந்நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டபோது நூலகங்கள் திறக்கப்படாத நிலையில் பலரும் நூலகங்களை திறக்க கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் இன்று முதல் நூலகங்களை திறக்க பொதுநூலக இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி 15 வயதிற்குட்பட்டோர், 60 வயதிற்கு மேற்பட்டோர், கர்ப்பிணி பெண்கள் நூலகம் செல்ல அனுமதி கிடையாது. நூலகம் செல்பவர்கள் புத்தக அடுக்குகளுக்கு செல்ல அனுமதி கிடையாது என கட்டுப்பாடுகளுடன் நூலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்