பிரதமர் திறந்து வைத்த ஆதியோகி சிலை மீது நீதிமன்றத்தில் புகார் செய்த தமிழக அரசு

புதன், 1 மார்ச் 2017 (20:13 IST)
கடந்த வாரம் பாரத பிரதமர் நரேந்திர மோடி கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி ஈஷா மையத்தில் கட்டப்பட்டிருந்த ஆதியோகி சிலையை திறந்து வைத்தார். ஆனால் இந்த சிலை உள்ள ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், இந்த சிலையை பிரதமர் திறந்துவைக்க கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.




ஆனால் எதிர்க்கட்சிகளின் எச்சரிக்கையையும் மீறி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அபோது தமிழக அரசு தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 'கோவை ஈஷா மையத்தில் விதிகளை மீறி கட்டடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. 109 ஏக்கர் நிலத்தில் அங்கீகாரம் பெறாத கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதற்கான அபராதத் தொகையை அரசுக்கு செலுத்தவில்லை. ஆதியோகி சிவன் சிலை, மூன்று மண்டபம் கட்ட ஒரு லட்சம் சதுரஅடி அளவை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிப்பு செய்துள்ளது. ஆதியோகி சிவன் சிலை அமைப்பு பற்றிய ஆவணத்தை தாக்கல் செய்ய ஈஷாவிடம் கேட்டுள்ளோம். மதவழிபாட்டைக் கருத்தில் கொண்டு 19.45 ஹெக்டேர் விளைநிலத்தை மாற்ற கோவை ஆட்சியர் அனுமதியளித்தார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர் திறந்து வைத்த சிலைக்கு எதிராக தமிழக அரசின் மனு உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வரும் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்