தீபாவளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! – பேருந்து நிறுத்தங்கள் பட்டியல்!

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (13:34 IST)
தீபாவளிக்கு சென்னையிலிருந்து மக்கள் பலர் வெளி மாவட்டங்களுக்கு செல்வார்கள் என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் பகுதிகள் குறித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் நவம்பர் 14ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால் சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தீபாவளிக்காக நவம்பர் 11 முதல் 13 வரை சென்னையிலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிபூண்டி, ஊத்துக்கோட்டை செல்லும் பேருந்துகள் மாதவரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்தும், ஈசிஆர் வழியாக புதுச்சேரி, கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் கே.கே.நகர் பேருந்து நிலையத்திலிருந்தும் புறப்படும்.

மேலும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், புதுச்சேரி, கடலூர், செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், ஓசூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருத்தணி செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும்.

இவை தவிர மயலாடுதுறை, நாகப்பட்டிணம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, திருச்செந்தூர், புதுக்கோட்டை, விருதுநகர், திருப்பூர், ஈரொடு, ராமநாதபுரம், கன்னியாக்குமரி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு வழக்கம்போல கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்