தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. நிதியமைச்சரும் அவை முன்னவருமான பன்னீர்செல்வம் நடப்பு நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார்.
விபரங்கள்:-
* மீண்டும் சட்டப்பேரவை வருகிற 25-ஆம் தேதி கூடுகிறது.
* நடப்பு நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இரண்டரை மணி நேரம் வாசித்தார்.
* சமூக நலத்துறைக்கான மொத்த நிதி 4,512.32 கோடி ஒதுக்கீடு.
* உலமாக்களுக்கான மாத உதவித்தொகை 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தி தரப்படும்.
* புதிய திட்டங்களை செயல்படுத்துவதால் மாநிலத்தின் செலவுகள் அதிகரித்துள்ளன.
* ஆதித்திராவிடர், பழங்குடியினர் தொழில் தொடங்க ரூ.130 கோடி நிதி ஒதுக்கீடு.
* சத்துணவுத் திட்டத்திற்கு ரூ.1644 கோடி நிதி.
* தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.152.76 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நிதி ரூ.207 கோடி.
* பெண் குழந்தை பாதுகாப்பு/தொட்டில் குழந்தை திட்டத்திற்கு ரூ.140.50 கோடி நிதி.
* ஏழை பெண்களுக்கு திருமண நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.703.16 கோடி நிதி.
* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.1699 கோடி நிதி.
* இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.153.39 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஆதித்திராவிடர் நலன் துணைத் திட்டத்திற்கு ரூ.12,462 கோடி ஒதுக்கீடு.
* பழங்குடியினர் நலன் துணைத் திட்டத்திற்கு ரூ.722 கோடி நிதி ஒதுக்கீடு.
* பழங்குடியின மாணவர்களுக்கான உண்டு உறைவிட பள்ளிகளில் உணவு வழங்க ரூ.103.15 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் முதல் மிதிவண்டி வரையிலான இலவச திட்டங்களுக்கு ரூ.2705 கோடி ஒதுக்கீடு.
* முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்காக ரூ.582.58 கோடி உதவித்தொகை ஒதுக்கீடு.
* உயர் கல்வித்துறைகு ரூ.3679.10 கோடி நிதி ஒதுக்கீடு.
* கல்லூரி உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.233 கோடி நிதி ஒதுக்கீடு.
* பள்ளி கட்டிடங்களை மேம்படுத்த ரூ.330.60 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* கல்வி உரிமை சட்டப்படி அனைவருக்கும் கட்டாய கல்வி வழங்க 125.70 கோடி ஒதுக்கீடு.
* சர்வ ஷிக்ச அபியான் திட்டத்திற்கு ரூ.2,329.15 கோடி ஒதுக்கீடு.
* இடைநிலை கல்வி இயக்க திட்டத்திற்கு 1139 கோடி நிதி ஒதுக்கீடு.
* சென்னை மெட்ரோ ரயில் 2-வது கட்ட திட்ட அறிக்கையை உருவாக்கி செயல்படுத்தப்படும்.
* மெட்ரோ இரண்டாவது கட்டத்தில் பயணப்பாதை 104 கி.மீ அமைக்க திட்டம்.
* சுகாதாரத்துறைக்கு ரூ.9,073 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தேசிய சுகாதாரத் திட்டத்திற்கு ரூ.1,423.38 கோடி நிதி ஒதுக்கீடு.
* 10 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, 7 மாவட்ட தலைமை மருத்துவமனை உலக தரத்தில் மேம்படுத்தப்படும்.
* நகராட்சி நிர்வாகத்திற்கு ரூ.11820 கோடி நிதி ஒதுக்கீடு.
* வீட்டுவசதித் துறைக்கு ரூ.689 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தூய்மைத் தமிழகத் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
* ரூ.373.82 கோடி செலவில் 4 நகர்புற குடிநீர் வழங்கல் மேம்பாட்டு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
* உள்ளாட்சி நிதிபகிர்வு ரூ.11534.34 கோடி ஒதுக்கீடு.
* சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டிற்கு ரூ.470 கோடி நிதி ஒதுக்கீடு.
* சிறைசாலை துறைக்கு 282.92 கோடி நிதி ஒதுக்கீடு.
* தீயனைப்பு துறைக்கு ரூ.230.7 கோடி நிதி ஒதுக்கீடு.
* பொன்னேரி பிளாஸ்டிக் தொழில் முனையம் தேசிய அளவிலான மையமாக மேம்படுத்தப்படும்.
* ரூ. 2,104.49 கோடி தொழில் துறை வளர்ச்சிக்காக ஒதுக்கீடு செய்யப்படும்.
* வெள்ளம் பாதித்த பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடப்பு நிதியாண்டில் ரூ.30 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.94 கோடி நிதி ஒதுக்கீடு.
* ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மிகப்பெரிய வாகன ஆராய்ச்சி மையத்தை தொடங்க உள்ளது.
* உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் ரூ.23,000 கோடி அளவுக்கு முதலீடுகள் இதுவரை வந்துள்ளது.
* அனல் மின்சாரம் 13000 மெகாவாட்டாகவும், சூரிய மின்சாரம் 3000 மெகாவாட்டாகவும் அதிகரிக்கப்படும்.
* பழைய பேருந்துகளை மாற்றி 2000 புதிய பேருந்துகள் வாங்க போக்குவரத்து துறைக்கு ரூ.150 கோடி வழங்கப்படும்.
* போக்குவரத்து துறைக்கு ரூ.1295 கோடி ஒதுக்கீடு.
* தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மேலும் மேம்படுத்தப்படும்.
* 2016-17-ஆம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.
* விவசாயிகளுக்கு ரூ.1000 கோடி புதிய பயிர்கடன் தரப்படும்.
* இணையதளம் வழியாக ரேசன் கார்டு முகவரி மாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
* மின்சார தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி சரிசெய்யப்படும்.
* தோட்ட கலைத்துறைக்கு 518.19 கோடி நிதியுதவி வழங்கப்படும்.
* சேலத்தில் 5 சாலை சந்திப்பில் மேம்பால பணிகள் துரிதப்படுத்தப்படும்.
* நெல்லை, கொல்லம் நெடுஞ்சாலை 4 வழிப்பாதையாக மாற்றப்படும்.
* சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு ரூ.1230 கோடி நிதி ஒதுக்கீடு.
* மீன்வளத்துறைக்கு ரூ.743.99 கோடி நிதி ஒதுக்கீடு.
* தேசிய நதிகளை இணைக்கு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்.
* வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ரூ.140 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* மதுரையில் பால் பொருட்கள் தயாரிக்கும் மையம் அமைக்கப்படும்.
* உள்ளாட்சி தேர்தலை நடத்த ரூ.183.20 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* நலத்திட்டங்கள் மற்றும் மானியங்களுக்காக 68,211.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
* இந்த நிதியாண்டில் 12000 கறவை மாடுகள் ஏழைப்பெண்களுக்கு வழங்கப்படும்.
* வன விலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* இலவச அன்ன தானம் திட்டம் 30 கோயில்களுக்கு விரிவு படுத்தப்படும்.
* ஒரு லட்சம் குடும்பங்களுக்கு 4 லட்சம் ஆடுகள் வழங்கப்படும்.
* கால்நடைப் பராமரிப்புத் துறைக்கு ரூ.1,188.17 கோடி ஒதுக்கீடு.
* பள்ளி கல்வி துறைக்கு 24,130 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
* எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 1429.94 கோடி ஒதுக்கீடு.
* கறவை மாடுகள் வாங்குவதற்கான நிதி 30000 ரூபாயிலிருந்து 35000 ரூபாயாக உயர்த்தப்படும்.
* வெள்ளத்தடுப்பு திட்டத்தில், கடலூர் மாவட்ட ஆறுகளின் கரைகளை பலப்படுத்த ரூ.140 கோடி ஒதுக்கீடு.
* பண்ணை இயந்திரம் வாங்க விவசாயிகளுக்கு 50 சதவீதம் மாணியம் வழங்கப்படும்.
* லோக் அயுக்தா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* போக்குவரத்து துறைக்கு 1295.08 கோடி நிதி ஒதுக்கப்படும்.
* 2000 புதிய பேருந்துகள் வாங்க 125 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
* பால்வளத்துறைக்கு 121.60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
* 2016-17-இல் மின்சார துறைக்கு ரூ.13856 கோடி மனியமாக தரப்படும்.
* மாநிலத்திற்கு 2.5 லட்சம் கோடி கடன் உள்ளது.
* 2016-17-இல் காவல்துறையினருக்கு 2673 வீடுகள் கட்டித்தரப்படும்.
* அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும்.