பாஜகவுக்கு தான் அதிக தமிழ்ப்பற்று இருக்கிறது: தமிழிசையின் அடடா விளக்கம்!

Webdunia
வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (15:29 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19-ஆம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். ஆனால் வரலாற்றில் முதன் முறையாக பட்ஜெட்டை இந்தியில் படித்தார் அவர்.
 
இந்தியில் பட்ஜெட் படிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார்.
 
மற்ற மாநிலங்களுக்காகவே பட்ஜெட் உரை தமிழில் வாசிக்கப்பட்டது. பட்ஜெட் உரையின் பிரதி தமிழிலும் அச்சிடப்பட்டுள்ளது. எனவே இதனை அரசியலாக்க வேண்டாம். மொழியை வைத்து அரசியல் செய்வதை தமிழக இளைஞர்கள் இனியும் நம்ப மாட்டார்கள்.
 
பாஜக ஆட்சியில் தமிழ் இன்னும் ஓங்கி ஒலிக்கும். மற்ற கட்சிகளை காட்டிலும் பாஜகவுக்கு தான் தமிழ்ப்பற்று அதிகம் இருக்கிறது. தமிழ் பற்றாளர்களில் வைகோவுக்கு பாஜக தலைவர்கள் சற்றும் குறைந்தவர்கள் இல்லை என தமிழிசை கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்