தமிழ் பாடம்: சிறுபான்மை மாணவர்களுக்கு விலக்கு

Sinoj

செவ்வாய், 12 மார்ச் 2024 (23:03 IST)
தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு அறிவித்திருந்தது.
 
இந்த  நிலையில், தமிழை தாய் மொழியாக கொண்டிராத 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுபான்மை பிரிவு மாணவர்களுக்கு தமிழ்த் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
வரும் 26 ஆம் தேதி முதல் நடைபெறவுள்ள பொதுத்தேர்விலேயே விலக்கு அளிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்