தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கா?

செவ்வாய், 26 ஏப்ரல் 2022 (12:25 IST)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி. 

 
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்புகள் கடந்த சில நாட்களாக வெகுவாக குறைந்திருந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தனர். ஆனால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது மீண்டும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை ஐஐடியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று ஐஐடியில் 32 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 111 ஆக அதிகரித்துள்ளது. இதில் 2 பேர் முழுவதும் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ள நிலையில் 109 பேர் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 
மேலும், இதனைத்தொடர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இல்லை. தற்போதைய சூழலில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த அவசியம் இல்லை. மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம். தமிழக அரசின்  வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்