அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் மழை!

திங்கள், 16 மே 2022 (11:26 IST)
அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என தகவல். 

 
கடந்த சில நாட்களாக அசானி புயல் காரணமாகவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் தமிழகத்தில் மழை பெய்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி, விருதுநகர் மற்றும் சேலம், ஈரோடு மாவட்டங்களில் இன்று கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனைத்தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பில் அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புயுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், கரூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்றும் ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மாவட்டங்களிலும் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புயுள்ளது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்