அடுத்த ரவுண்டு மழைக்கு ரெடி ஆகுங்க மக்களே!!

திங்கள், 14 டிசம்பர் 2020 (13:36 IST)
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை வானிலை ஆய்வு மையம் இது குறித்து தெரிவித்துள்ளதாவது, வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக டிசம்பர் 16 முதல் 18 வரை கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்