மார்க்கெட் ரேட்டை விட கம்மி: ரேஷன் கடையில் மளிகை; ரூ.500-க்கு என்ன கிடைக்கும்?

Webdunia
சனி, 11 ஏப்ரல் 2020 (10:41 IST)
தமிழக அரசு ரேஷன் கடையில் மக்களுக்கு தேவையான மளிகை பொருட்களை விற்க திட்டமிட்டுள்ளது. 
 
கொரோனா காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது நீட்டிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாமல் இருக்கு ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் இலகவசமாக வழங்கப்பட்டது. 
 
இதனைத்தொடர்ந்து காய்கறிகள் வீட்டிற்கே வந்து கொடுக்கப்படும் திட்டமும் கொண்டுவரப்பட்டது. தற்போது ரேஷன் கடைகளில் ரூ.500-க்கு 19 பொருட்களை 10 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது அரசு. 
 
அந்த வகையில் இந்த 19 பொருட்களும் மார்கெட் விலையை விட குறைந்த விலையிலேயே கொடுக்கப்பட உள்ளது. அந்த 19 பொருட்கள் பின்வருமாறு, துவரம் பருப்பு – 1/2 கிலோ, உளுத்தம் பருப்பு – 1/2 கிலோ, கடலை பருப்பு -1/4 கிலோ, மிளகு – 100 கிராம், சீரகம் – 100 கிராம், கடுகு – 100 கிராம், வெந்தயம் – 100 கிராம், தோசை புளி -250 கிராம், பொட்டுக் கடலை – 250 கிராம், நீட்டு மிளகாய் – 150 கிராம், தனியா – 200 கிராம், மஞ்சள் தூள் – 100 கிராம், டீ தூள் – 100 கிராம், உப்பு – 1 கிலோ, பூண்டு – 250 கிராம், எண்னெய் (Gold winner) – 200 கிராம், பட்டை – 10 கிராம், சோம்பு – 50 கிராம், மிளகாய் தூள் – 100 கிராம். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்