தமிழக அரசின் பதில் ஏற்றுக் கொள்ள முடியாது: சிபிஐ முத்தரசன் காட்டம்

வியாழன், 2 ஜூலை 2015 (23:06 IST)
நிதிப்பற்றாக் குறையை காரணம் காட்டி, தமிழக சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்புவது சாத்தியமில்லை என தமிழக அரசு கூறியுள்ளது ஜனநாயக அத்துமீறல் என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கருத்து தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
மக்கள் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பது மக்களின் உரிமை. அதை தயக்கமின்றி தமிழக அரசு வழங்க வேண்டும்.
 
அதைவிடுத்து, நிதிப்பற்றாக்குறையைே காரணம் கூறி, தமிழக சட்டப் பேரவை நிகழ்சிகளை ஒளிப்பரப்ப இயலாது என அரசு கூறுவது, மக்களின் உரிமையை நிராகரிக்கும் செயல் மட்டும் அல்ல ஜனநாயக அத்துமீறல் ஆகும்.
 
எனவே, ஜனநாயக விரோத போக்கை கைவிட்டுவிட்டு, சட்டப் பேரவை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிபரப்ப தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்