ஆபாச நடனம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு : உயர் நீதிமன்ற மதுரை கிளை

செவ்வாய், 18 செப்டம்பர் 2018 (19:50 IST)
சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதுரை சிந்தாமணியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில் "தமிழகத்திலுள்ள கோயில் திருவிழா, அரசு விழாக்கள், திருமண விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் ஆபாசமான ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகத் தெரிவித்தார்.

இதனால் சமூக ஒழுக்கம் கெட்டு வருவதோடு பல பிரச்சினைகள் ஏற்படவும் காரணமாகின்றன. சில ஆபாச நடன நிகழ்ச்சிகளைக் காவல் அதிகாரிகளே தலைமையேற்று நடத்தி வைக்கின்றனர். அதனால், அவற்றைத் தடை செய்ய வேண்டும்” என தனது மனுவில் கூறியிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது அப்போது இவ்விவகாரம் தொடர்பாக தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் சுற்றுலா, கலை பண்பாட்டுத் துறைச் செயலர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென உத்தரவிட்டு, இந்த வழக்கை அக்டோபர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்