தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ் ஆவேசம்

திங்கள், 14 மார்ச் 2016 (05:25 IST)
மாணவர் சேர்க்கை குறித்து, தமிழக அரசு தவறான தகவல்களை வெளியிட்டதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி, 2014-15-ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரங்கள் வெளியிட்டுள்ளது.
 
குறிப்பாக, மாநிலங்கள் வாரியாக குஜராத் மாநிலத்தில் உள்ள ஆமதாபாத் இந்திய மேலாண்மையியல் நிறுவனத்தில் செயல்பட்டு வரும் கல்வி உரிமைச் சட்ட வள மையம் வெளியிட்டுள்ளது.
 
இதில், தமிழகத்தில் 37.75 இடங்கள் நிரப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. ஆனால், தமிழக கல்வித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி 94 சதவீதம் இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
 
இதன் மூலம் தவறான தகவலை தமிழக அரசு அளித்துள்ளது வெளியே வந்துள்ளது. இதற்காக, தமிழக  அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்