தமிழக தேர்தல்: 338 வேட்பாளர்களின் வேட்புமனு வாபஸ்

செவ்வாய், 3 மே 2016 (10:16 IST)
தமிழக சட்டசபை தேர்தல் வரும் 16-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று அதனை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதி நேற்றுடன் முடிவடைந்தது.


 
 
வேட்பாளர்கள் வேட்புமனு வாபஸ் பெறுவதற்கான தேதி நேற்றுடன் முடிவடைந்ததை அடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சென்னையில் உள்ள தமிழக தலைமை தேர்தல் ஆணையத்தில் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் 3,794 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 3,472, பெண் வேட்பாளர்கள் 320, திருநங்கைகள் 2 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர்.
 
338 வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் வேட்பாளர் மனுவை வாபஸ் பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் முதலமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகர் தொகுதியில் அதிகபட்சமாக 45 பேர் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சமாக ஆற்காடு, மயிலாடுதுறை, கூடலூர் தொகுதிகளில் 8 பேர் போட்டியிடுகின்றனர்.
 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக 104684 வாக்குபதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளது. மேலும் 97% அரசு ஊழியர்கள் தபால் வாக்கு அளிக்கவுள்ளனர். தபால் வாக்கு பதிவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ராஜேஷ் லக்கானி தெரிவித்தார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்