அம்மாவுக்கு இனி எல்லாமே 5 நம்பர் தான் ராசியாமே?

வியாழன், 28 மே 2015 (22:46 IST)
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு தற்போது ராசியான எண்ணாக 5ஆம் எண்ணைக் குறிப்பிடுகின்றனர்.
 
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா, ஆன்மீகத்திலும், ஜோதிடத்திலும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர். 
 
தனது எல்லா செயல்களையுமே, நல்ல நேரம், காலம் பார்த்தே செய்வார். ராசியான எண், ராசியான கலர் என சிலவற்றை விரும்பி பயன்படுத்துவார். இதனால் கூட அவர் மீது விமர்ச்சனம் எழுந்துண்டு. ஆனால், அவர் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல், தனது வழியில் சென்று வருகின்றார்.
 
ஆரம்பத்தில், ஜெயலலிதா பல்வேறு முக்கிய முடிவுகளைவும், அமைச்சர்கள் கூட்டு எண்ணிக்கையும், தனது கார் எண் ஆகியவையும் 9 வருமாறு பார்த்துக் கொண்டார். பின்பு அது 6 ஆக மாறிப்போனது. 
 
இதற்கு அடுத்து, 6 வது எண் மாற்றப்பட்டு 7 வது எண் ராசியாக கருதப்பட்டது. தற்போது அதற்கும் விடை கொடுத்து, சமீப காலமாக அவர் அதிக அளவில் 5ம் எண்ணையை பயன்படுத்தி வருகின்றாராம்.
 
உதாரணத்திற்கு, ஜெயலலிதா தமிழக முதலமைச்சராக பதவியேற்ற நாள் 23 ஆம் தேதி. முதலமைச்சராக பதவியற்றதும் 5 திட்டங்களுக்கான ஃபைல்களில் கையெழுத்திட்டு பணியைத் துவக்கிவைத்தார். 
 
இது குறித்து பிரபல ஜோதிடர் ஒருவரிடம் 5ஆம் எண் குறித்து கேட்டபோது, அவர் நம்மிடம், எண் கணிதத்தில் 5ஆவது இடம் புதனுக்கு உரியது. எண்களிலேயே, 5 ஆவது எண்ணுக்கு சிறப்பான இடம் உண்டு. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ஆகிய எண் வரிசையில் 5ம் எண்ணே மற்ற எண்களுக்கும் நடுவில் அமைந்துள்ளது என்பதே இதன் சிறப்புக்கு காரணம்.
 
மற்ற எண்காரர்கள் தங்களது துன்பங்களையும், துயரங்களையும் கண்டு கலங்கும்போது, இவர்கள் அதை சவால்களாக எடுத்துக் கொண்டு, அறிவு மூலம் வெற்றியைப் பெறுவார்கள். ஒவ்வொரு நிமிடமும் புதுப்புது யோசனைகள் இவர்களுக்கு கிடைக்கும். 
 
மகா விஷ்ணுவின் தொழில் மக்களைக் காத்தல் அது போல, 5ம் எண் அனைவரையும் காப்பாற்றும் வலிமை கொண்டது. எனவேதான் இந்த எண்ணைக் காந்த எண் அல்லது ஜனவசியம் நிறைந்த எண் என்று கூறுவார்கள் என்றார். 
 
இனிமேல், முதலமைச்சர் ஜெயலலிதாவால் துவக்கப்படும் திட்டங்கள், பங்கேற்கும் விழாக்கள் போன்றவைகள் எல்லமே  5 வருமாறு பார்த்துக் கொள்வார் அதிமுக தரப்பில் கூறப்படுகின்றது.   
 
எது எப்படியோ பொது மக்களுக்கு நன்மை நடந்தால் சரி.

வெப்துனியாவைப் படிக்கவும்