தமிழக மூத்த அமைச்சர்களுடன் ஜெயலலிதா திடீர் ஆலோசனை

திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (22:02 IST)
தமிழக மூத்த அமைச்சர்களுடன்,  முதலமைச்சர் ஜெயலலிதா திடீர் ஆலோசனை நடத்தினார்.
 

 
சென்னை தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் சட்டம், ஒழுங்கு நிலைமை குறித்து, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா இன்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் உள்ள சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ஆலோசனை செய்தார். குறிப்பாக, தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராக தமிழக அரசியல் கட்சிகள் கடும் போராட்டம் நடத்தி வருவது குறித்து ஆலோசனை நடத்தியதாக தெரிய வருகிறது.
 
இந்தக் கூட்டத்தில், தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், தமிழக அரசு ஆலோசகர்கள் ஷீலா பாலகிருஷ்ணன், கே.ராமானுஜம், உள்துறை முதன்மை செயலாகர் அபூர்வ வர்மா, காவல்துறை தலைமை இயக்குநர் அசோக்குமார், கூடுதல் தலைமை இயக்குநர் (சட்டம் ஒழுங்கு) ராஜேந்திரன், காவல்துறை தலைவர் (நுண்ணறிவு) டேவிட்சன் தேவாசீர்வாதம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்