ஜெ.விற்கு சசிகலா அடிக்கடி கொடுக்கும் மாத்திரை - ஜெ.வின் டிரைவர் பகீர் தகவல்

திங்கள், 6 மார்ச் 2017 (12:26 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து, கொடநாட்டில் அவரிடம் பல வருடங்கள் பணிபுரிந்த கார் டிரைவர் திவாகர் சந்தேகம் எழுப்பியுள்ளார்.


 

 
ஜெ.வின் மர்ம மரணம் குறித்து மக்களிடையே பல்வேறு சந்தேகங்களும், கேள்விகளும் எழுந்து கொண்டிருக்கிறது. ஓ.பி. எஸ் அணி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் இதுபற்றி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில், ஜெயலலிதா அடிக்கடி சென்று தங்கும் கொடநாட்டில் அவருக்கு கார் டிரைவராக பணியாற்றிய திவாகர்(42) என்பவர், என்பது ஜெ.வின் மர்ம மரணம் குறித்து சில பகீர் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 
2005ம் ஆண்டிலிருந்து 2009ம் ஆண்டு வரை ஜெயலலிதா கொடநாட்டிற்கு வரும் போது, அவருடைய வாகனத்திற்கு முன் வரும் பாதுகாப்பு வாகனத்தை நான் ஓட்டுவேன். அப்போது, ஜெ.வும், சசிகலாவும் பேசும் பல விஷயங்களை நான் அருகிலிருந்து கேட்டுள்ளேன். ஆனால் அதுபற்றி நான் வெளியே கூறியது கிடையாது. ஆனால், தற்போது நடந்துள்ள சம்பவங்களை பார்த்தால், ஜெ.வை கொல்வதற்கு அன்றைக்கே திட்டம் தீட்டியிருக்கலாம் என எனக்கு சந்தேகம் வருகிறது.


 

 
கொடநாட்டிற்கு ஜெ. வரும் போது, எஸ்டேட்டை சுற்றி பார்த்து விட்டு, அங்குள்ள ஏரியில் படகு சவாரி செய்வார். ஒருநாள் படகு சவாசி செய்து விட்டு அவர் காரில் ஏறும்போது, தனக்கு உடல் வலி அதிகமாக இருப்பதாக அவர் சசிகலாவிடம் கூறினார். அப்போது, சசிகலாவிடம், வேலைக்கார பெண் சித்ரா ஒரு மாத்திரையை கொடுத்தார். அதை அவர் ஜெ.விடம் கொடுத்து சாப்பிட சொன்னார். அதை விழுங்கிய சில நொடிகளில், இப்போது எனக்கு வலி குறைந்துள்ளது என ஜெ. சொல்வார்.  அந்த மாத்திரையை அவருக்கு அடிக்கடி சசிகலா கொடுப்பதை நான் பார்த்திருக்கிறேன்.
 
சாப்பிட்ட உடனேயே உடல் வலி குறைகிறது எனில், அது மெல்லக் கொல்லும் ஆற்றல் உடைய வலி நிவாரணியாகத்தான் அந்த மாத்திரை இருக்க வேண்டும் என எனக்கு இப்போது சந்தேகம் வருகிறது. அவரது மரணத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என அவர் பகீர் தகவலைக் கூறியுள்ளார்.

பட உதவி - தினமலர்

வெப்துனியாவைப் படிக்கவும்