புதுச்சேரியில் போக்குவரத்து காவலர்களுக்கு வார இறுதியில் புதிய சீறுடை டி-சர்ட் வழங்கப்பட்டுள்ளது.
வெயில் என்றும் பாராமல் சாலைகளில் மணிக்கணாக்காக நிற்பவர்கள் போக்குவரத்து காவலர்கள். மேலும் அவர்களுக்கு வேலை பளூ அதிகமாக இருக்கும் காரணத்தால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். அந்த மன அழுத்தத்திற்கு அவர்களின் சீறுடைகளும் ஒரு காரணமாக அறியப்படுகிறது.
இந்நிலையில் புதுச்சேரி போக்குவரத்து காவல்துறை , போக்குவரத்து காவலர்களுக்கு வார இறுதி நாட்களில் டி-சர்ட் அணிந்து பணிபுரிய வலியுறுத்தும் வகையில் புதிய சீறுடை வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய டி-சர்ட்டுகள் போக்குவரத்து காவலர்களுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளிக்கும் என அம்மாநில காவல் துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.